இத்தாலிக்கு பயணம் செய்ய கடப்பிதழை திரும்பப் பெற ஷபி அப்துல்லாவிற்கு நீதிமன்றம் அனுமதி

தனது மகளின் பள்ளி இடமாற்றத்தை நிர்வகிப்பதற்காக இத்தாலி செல்ல தனது அனைத்துலக கடப்பிதழை  தற்காலிகமாக விடுவிக்க கோரிய வழக்கறிஞர் ஷபி அப்துல்லாவின் விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் இன்று அனுமதித்தது.

துணை அரசு வக்கீல் அப்ஸைனிசம் அப்துல் அஜீஸ் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காததால், ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 11 வரை பாஸ்போர்ட்டை தற்காலிகமாக விடுவிக்க நீதிபதி ஜமில் ஹுசின் அனுமதி வழங்கினார். ஷாபி தனது விண்ணப்பத்தில், தனது மகளை மீண்டும் மலேசியாவில் உள்ள பள்ளிக்கு மாற்ற விரும்புவதாகக் கூறினார்.  ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் அவர் தனது பாஸ்போர்ட்டைத் திருப்பித் தர வேண்டும். ஷபி சார்பில் இணை வழக்கறிஞர் வீ யோங் காங் ஆஜரானார்.

செப்டம்பர் 2013 மற்றும் பிப்ரவரி 2014 க்கு இடையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடம் இருந்து RM9.5 மில்லியனுக்கும் அதிகமான பணமோசடி செய்ததாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பின்னர், 2018 செப்டம்பரில் ஷபியின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நான்கு குற்றச்சாட்டுகளில், இரண்டு குற்றச்சாட்டுகள் 2013 மற்றும் 2014 மதிப்பீட்டு ஆண்டுகளில் உள்நாட்டு வருவாய் வாரியத்திற்கு (LHDN) தவறான அறிக்கைகளை வழங்கியது தொடர்பானது. விசாரணை மீண்டும் செப்.15ம் தேதி நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here