கோலா சிலாங்கூர் வழியாக சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய முயன்ற 37 வெளிநாட்டினர் கடல்சார் அமலாக்கத்துறையினரால் கைது

சிரம்பான், ஜூலை 1 :

சிலாங்கூரில் உள்ள கோலா செப்பாங் கடற்பரப்பில் படகு மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைய முயன்ற, 37 வங்கதேசத்தை சேர்ந்தவர்களை மலேசிய கடல்சார் அமலாக்க முகமைத் துறையினர் கைது செய்துள்ளனர்.

மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் கடல்சார் அமலாக்க முகமைத் துறை இயக்குநர் கேப்டன் இஸ்கந்தர் இஷாக் கூறுகையில், “போட் பான்குங்” என்று பிரபலமாக அழைக்கப்படும் படகில் சட்டவிரோத குடியேறிகளை கடத்த முயன்ற நான்கு இந்தோனேசியர்களையும் அவரது துறையினர் கைது செய்தனர் என்றார்.

“நேற்று (ஜூன் 30) இரவு 11 மணியளவில், மலேசியக் கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை எங்கள் ரேடார் கண்டறிந்த பிறகு, நாங்கள் ஒரு நடவடிக்கையைத் தொடங்கினோம்.

“எங்கள் ரோந்துப் படகு ஒன்று அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டது. கோலா செப்பாங்கிற்கு அப்பால் 1.2 கடல் மைல் தொலைவில் ஒரு பதிவு செய்யப்படாத படகைக் கண்டோம்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் இக்கடத்தலை ஒருங்கிணைத்த இந்தோனேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் 18 முதல் 46 வயதுக்குட்பட்ட அவரது நான்கு உதவியாளர்களும், செல்லுபடியாகும் எந்த அடையாள ஆவணங்களையும் வழங்கத் தவறியதாக கேப்டன் இஸ்கந்தர் கூறினார்.

பின்னர் படகில் இருந்த 41 பேரும் எம்எம்இஏ ஜெட்டிக்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த வழக்கு, நபர்கள் கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு (திருத்தம்) சட்டம் 2022 மற்றும் குடிவரவு சட்டம் 1959/63 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

நாடு கோவிட்-19 பரவும் இறுதிக்கட்டத்திற்கு மாறும்போது, ​​எல்லை தாண்டிய குற்றங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க ஹாட்ஸ்பாட்களில் கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தை MMEA தீவிரப்படுத்தியுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here