கோலாலம்பூர், ஜூலை 4 :
மலேசியா வாழ் முஸ்லீம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்வரும் 10 ஆம் தேதி கொண்டாடஉள்ள நிலையில், கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை (KLK) மற்றும் முதல் கட்ட கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை (LPT1) ஆகியவற்றில் இவ்வார இறுதி நாட்களில் அதிகமான வாகனப் போக்குவரத்து இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனிஹ் பெர்ஹாட்டின் தலைமை பொது மேலாளர் ரட்ஸிமா முகமட் ராட்ஸி கூறுகையில், ஜூலை 8 முதல் 11 வரையான காலப்பகுதியில் KLK இல் மொத்தம் 1,648,000 வாகனங்களும், LPT1 இல் 704,000 வாகனங்களும் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
மலேசியர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்த தியாக திருநாளை கொண்டாடும் போது பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காகவும், சாளை பயனர்களின் சௌகாரியம் கருதியும் தமது நிறுவனம் பயண நேர ஆலோசனைகள் உட்பட பல வசதிகளை செய்துள்ளது என்று திங்கள்கிழமை (ஜூலை 4) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ராட்ஸிமா தெரிவித்துள்ளார்.
மேலும் பயனர்கள் கவனமாக ஓட்டவும், அவர்களின் வாகனங்கள் உகந்த நிலையில் இருப்பதை உறுதி செய்யவும், அவர்களின் Touch n’ Go மற்றும் SmartTag சமநிலையை சரிபார்கத்துக் கொள்ளுமாறும், அவர்களின் பயணத்தைத் தொடங்கும் முன் போதுமான ஓய்வை உறுதி செய்யவும் அவர் நினைவூட்டினார்.
அத்தோடு இந் நெடுஞ்சாலைகள் தொடர்பான மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள மக்கள் Twitter @LLMTrafik, @LPTTrafik மற்றும் Facebook @Lembaga Lebuhraya Malaysia, @Lebuhraya Pantai Timur அல்லது LLM ஹாட்லைன் 1800-88-7752 மற்றும் LPT-Line 1-700-818-ல் என்ற ஊடகங்கள் மூலம் துல்லியமான மற்றும் புதுப்பித்த தகவலை அறிந்து கொள்ளலாம் என்றார்.