பாலிங் வெள்ளம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM1,000 ஆரம்ப உதவி

பாலிங், ஜூலை 5 :

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு RM1,000 ஆரம்ப உதவியை வழங்குகிறது, அதே நேரத்தில் சம்பவத்தில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு RM10,000 வழங்கப்படும் என்று பிரதமரியின் அரசியல் செயலாளர் டத்தோ முகமட் அனுவார் முகமட் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்குள்ள பல தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆரம்ப உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

இன்று செவ்வாய்க்கிழமை SMK ஜெரையில் உள்ள நிவாரண மையத்திற்குச் சென்ற அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வீடு பழுதுபார்ப்பு உதவி பின்னர் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் என்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு, ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் இந்த விஷயத்தை அரசாங்கம் விவாதிக்கும் என்றும் கூறினார்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா), அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு (ICU) மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் நிலைமையை கண்காணிக்க உடனே செயலில் இறங்குமாறு, பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவுறுத்தியுள்ளார் என்றார்.

இதற்கிடையில், பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம், கடந்த 100 ஆண்டுகளில் இதுபோன்ற கடுமையான வெள்ளத்தை பாலிங் மாவட்டம் சந்தித்ததில்லை என்றும், எனவே, சம்பவத்திற்கு காரணமான காரணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆராய வேண்டும் என்றும் கூறினார்.

“இந்த விஷயத்தை நாங்கள் அரசாங்கத்திடம், குறிப்பாக சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சகம், நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை, நட்மா, மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் மற்றும் ICU ஆகியவற்றிடம் விட்டுவிடுகிறோம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here