மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முன்னாள் தேசிய கால்பந்து வீரர் ஜோகூர் பாருவில் நேற்று கைது செய்யப்பட்டார்.
ஜோகூர் உத்தாரா காவல்துறைத் தலைவர் ரூபியா அப்த் வாஹித் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். மேலும் கைது குறித்த அறிக்கையை திணைக்களம் விரைவில் வெளியிடும் என்று கோஸ்மோ தெரிவித்துள்ளது.
36 வயதான அந்த நபர் மூன்று சூப்பர் லீக் கால்பந்து அணிகளிலும் ஹரிமாவ் முடா மற்றும் ஹரிமாவ் மலாயா அணிகளிலும் அங்கம் வகித்தார் என்று அறிக்கை கூறுகிறது.
மலாக்காவில் பிறந்த சந்தேக நபர் 2009 மற்றும் 2017 க்கு இடையில் FAM கோப்பை, மலேசியா கோப்பை மற்றும் சாரிட்டி ஷீல்ட் மற்றும் சூப்பர் லீக் ஆகியவற்றை வென்ற அணிகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.