காரில் சிக்கிய பெண் குழந்தை, தீயணைப்பு வீரர்களால் பாதுகாப்பாக மீட்பு

அலோர் ஸ்டார், ஜூலை 11 :

இங்குள்ள அலோர் மேரா பகுதியில், பெரோடுவா விவா காரில் சிக்கிக்கொண்ட 47 நாட்களே ஆன பெண் குழந்தையையை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக மிட்டனர்.

இன்று பிற்பகல் 2.21 மணிக்கு சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அழைப்பு வந்ததாக அலோர் ஸ்டார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் அஹ்மட் நௌஃபல் அப்துல்லா தெரிவித்தார்.

அழைப்பு வந்ததும், மூத்த தீயணைப்பு அதிகாரி II, முகமட் ருஸ்டி லாசிம் தலைமையிலான அலோர் ஸ்டாரின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு சம்பவம் குறித்த புகாரைப் பெற்ற பின்னர், அந்த இடத்திற்கு வந்ததாக அவர் கூறினார்.

“தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி கார் கதவைத் திறந்து, குழந்தையை வெற்றிகரமாக மிட்டனர்.

ஐந்து நிமிடத்திற்குள் குழந்தையை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்ததுடன், இந்த நடவடிக்கை பிற்பகல் 2.43 மணியளவில் முழுமையாக முடிவடைந்தது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here