பிளாஸ்டிக் நாற்காலியில் தலை சிக்கிய நிலையில் வலியால் துடித்த மூதாட்டி தீயணைப்பு வீரர்களால் மீட்பு

கிள்ளான், ஜூலை 13 :

மேருவில் உள்ள தாமான் ஸ்ரீ புத்திரியில் உள்ள ஒரு வீட்டில், இன்று பிற்பகல் நடந்த சம்பவத்தில் பிளாஸ்டிக் நாற்காலியில் தலை மாட்டிய நிலையில் கிடந்த மூதாட்டியை, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மீட்டுள்ளதாக அதன் துணை இயக்குநரான ஹபிஷாம் முகமட் நூர் தெரிவித்தார்.

78 வயதான அந்த மூதாட்டி பிளாஸ்டிக் நாற்காலியில் அமருவதற்குள் கீழே விழுந்துவிட்டதாக நம்பப்படுகிறது என்றார்.

இன்று நண்பகல் 12.18 மணிக்கு சம்பவம் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், காப்பார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் குழு அந்த இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் தனியாக வசித்து வந்ததாகவும், அவர் வலியால் துடித்து கத்தியபோது, அங்கு வந்த அவரது அண்டை வீட்டாரால் அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“இடத்திற்கு தமது குழு வந்தபோது, ​​பாதிக்கப்பட்டவர் சுயநினைவுடன் இருந்தார், ஆனால் மிகவும் பலவீனமான நிலையில் காணப்பட்டார் என்றும் தீயணைப்பு வீரர்கள் அவரது தலையில் சிக்கிய நாற்காலியை அகற்றினர், பின்னர் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக சுகாதார ஊழியரிடம் ஒப்படைக்கப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here