வெளிநாட்டு தொழிலாளர்களை மற்ற நாடுகளிலிருந்து வரவழைக்கலாம் என்கிறார் ஹம்சா

இந்தோனேசியர்களை மலேசியாவில் பணிக்கு அனுப்புவதை தற்காலிகமாக முடக்கபட்டிருப்பதாக  கூறியதை தொடர்ந்து உள்துறை அமைச்சர் பங்களாதேஷ் உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தலாம் என்று கூறினார். எங்களிடம் பல வெளிநாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர், மேலும் 15 மூல நாடுகள் எங்களிடம் உள்ளன (தேர்வு செய்ய) என்று ஹம்சா ஜைனுதீன் கூறினார்.

இன்று முன்னதாக, ஜகார்த்தாவிற்கும் புத்ராஜெயாவிற்கும் இடையில் கையொப்பமிடப்பட்ட தொழிலாளர் ஆட்சேர்ப்பு ஒப்பந்தத்தின் மீறலை இந்தோனேசியா மேற்கோள் காட்டியது.

இந்தோனேசியப் பணிப்பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு மலேசியாவின் குடிநுழைவுத் துறை Maid Online System (MOS) தொடர்ந்து பயன்படுத்துவதே இதற்குக் காரணம் என்று இந்தோனேசிய தூதர் ஹெர்மோனோ கூறினார்.

ஏப்ரல் 1 ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட இந்தோனேசியப் பணிப்பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் “முழுமையான மீறல்” என்று தூதர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here