மது அருந்திவிட்டு வாகனமோட்டி உடல்பேறு குறைந்த தம்பதியினர் உயிரிழக்கக் காரணமான நபர் விசாரணை கோரினார்

மலாக்கா, ஜாசினில் ஜூன் மாதம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி உடல்பேறு குறைந்த தம்பதியினரின் மரணத்திற்கு காரணம் என  குற்றஞ்சாட்டப்பட்ட 24 வயதான தொழிற்சாலை தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை கோரினார்.

குற்றம் சாட்டப்பட்ட அமீருல் அன்வர் முகமது ஜெலானி (24) என்பவரின் மனு நீதிமன்றப் பதிவாளர் சித்தி கைரியா அப்துல் ரசாக் முன் வியாழக்கிழமை (ஜூலை 14) பதிவு செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது காரை கவனக்குறைவாக ஓட்டிச் சென்றதால், எசுதீன் முகமது (50) மற்றும் அவரது மனைவி சுரையா முஹமத் (46) ஆகியோருக்கு மரணம் ஏற்பட்டது. ஜூன் 6 ஆம் தேதி காலை 7.45 மணியளவில் ஜாலான் செர்காம் பந்தாய், மெர்லிமாவில் இந்த விபத்து நடக்க காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 (திருத்தப்பட்ட 1999) பிரிவு 41(1) இன் கீழ் குற்றச்சாட்டை எதிர்கொண்டார். குற்றம் நிரூப்பிக்கப்பட்டால் இது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக RM50,000 அபராதம் விதிக்கும்.

வழக்குரைஞர் முகமட் ஃபட்சுல்லா ராம்லீ சார்பில் ஆஜரான குற்றம் சாட்டப்பட்டவருக்கு இரண்டு உத்தரவாதங்களுடன் RM12,000 ஜாமீன் வழங்கப்பட்டது மற்றும் நீதிமன்ற நடவடிக்கை முடியும் வரை அவரது ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here