வங்காளதேச பணியாளர் ஆட்சேர்ப்பு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டன

வங்காளதேசத்தில் இருந்து வெளிநாட்டு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் செயல்முறையை பாதிக்கும் சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆட்சேர்ப்புக் கட்டணத்தைச் செலுத்திய முதலாளிகள் இப்போது வங்களாதேச தூதகரத்தின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் விசா ஆவணங்களை உறுதிப்படுத்த விண்ணப்பிக்கலாம் என்று அது கூறியது.

வங்காளதேச தூதரகம் 2,000 வருங்கால தொழிலாளர்களை உள்ளடக்கிய 15 ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் சரிபார்ப்பு செயல்முறையை நிறைவு செய்துள்ளது என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் வாரங்களில் ஆட்சேர்ப்பு செயல்முறை விரைவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழிலாளர்களின் நுழைவு குடிநுழைவுத்து துறையின் கீழ் சுகாதார பரிசோதனைகள் மற்றும் பிற தேவைகளுக்கு உட்பட்டது.

மலேசியாவும் வங்காளதேசமும் டிசம்பரில் தொழிலாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. புத்ராஜெயா தொழிலாளர்கள் ஆட்சேர்ப்புக்காக 25 வங்கதேச ஏஜென்சிகளை நியமிக்க முடிவு செய்திருந்தது. மனித வளத்துறை அமைச்சர் எம்.சரவணன் முன்பு, பல சிக்கல்கள் தீர்க்கப்பட உள்ளதால், ஆட்சேர்ப்பு செயல்முறை மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறினார்.

வங்காளதேசம், கம்போடியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக 200,000 ஆன்லைன் விண்ணப்பங்களை அமைச்சகம் பெற்றுள்ளதாக அவர் கூறினார். வெளிநாட்டு ஊழியர்களின் ஒப்புதலுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் one-stop centre உள்துறை அமைச்சகத்திலிருந்து மனித வள அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here