தனது இரண்டு சொந்த மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 30 ஆண்டுகள் சிறை; 15 பிரம்படிகள்

தனது இரண்டு சொந்த மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த 49 வயது தந்தைக்கு 30 ஆண்டு சிறை தண்டனையை கிள்ளான் உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. நீதிபதி அஸ்மி அப்துல்லா,  குற்றத்தின் கொடூரமான தன்மை பற்றிய தெளிவான  தகவலால் 15 பிரம்படி உள்ளடக்கிய கடுமையான தண்டனையை நிலைநிறுத்துவதாகக் கூறினார்.

சிறுமிகளின் சொந்த தந்தையான குற்றம் சாட்டப்பட்டவர் அவர்களின் வளர்ப்பிற்கு பொறுப்பாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களின் நம்பிக்கையை  அவர் இழந்து விட்டார். பிரதிநிதித்துவம் இல்லாத நபர், தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

ஏப்ரலில், அவர் பாலுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். வழக்கின் உண்மைகளின்படி, அவர் தனது அப்போதைய 14 வயது மகளுடன் மார்ச் 12 மற்றும் ஏப்ரல் 4, 2018 அன்று குடும்ப வீட்டில் இக்குற்றத்தை புரிந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி அதே வீட்டில் தனது 15 வயது மகளையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு தாயாரை விவாகரத்து செய்த பின்னர் சிறுமிகள் தங்கள் தந்தை மற்றும் இரண்டு சகோதரர்களுடன் தங்கியுள்ளனர். தந்தையின் நடந்ததை குறித்து தங்கள் தாயிடம் கூறியதை அடுத்து அவர்கள் கொடுமைப்படுத்துவது வெளிச்சத்துக்கு வந்தது.

சிறைத்தண்டனை மற்றும் சவுக்கடி தவிர, அந்த நபருக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும் மற்றும் அவர் விடுவிக்கப்பட்ட பிறகு மூன்று ஆண்டுகளுக்கு போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்படுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here