நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டதால், முன்னாள் மனைவியின் காரை பலமுறை மோதிய ஆடவர் கைது

நிச்சயம் முடிந்து திருமணம் செய்து கொள்ளவிருந்த பெண்ணுடன் மனமுறிவு ஏற்பட்டதால்,  முன்னாள்  மனைவியின் கார் மீது தனது காரை மோதியதாகக் கூறப்படும் ஆடவரை போலீசார் தடுத்து வைத்துள்ளனர் என்று தி ஸ்டார் ஆன்லைன் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை RNR ஃபித்ரா பண்டார் இண்டாவில் நடந்த இந்த சம்பவம் குறித்து பெண் புகார் அளித்ததாக சண்டகன் மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி அப்துல் ஃபுவாட் அப்துல் மாலேக் கூறினார். அன்றைய தினம் இரவு 11.15 மணியளவில் சந்தேக நபரை போலீசார் அழைத்துச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தேகநபர் குற்றவியல் சட்டத்தின் 427ஆவது பிரிவின் கீழ் மற்றுமொரு நபரின் சொத்துக்களுக்கு நஷ்டம் அல்லது சேதம் விளைவித்தமைக்காக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் தனது காரை மீண்டும் மீண்டும் வாகனத்தின் மீது மோதும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here