பொறாமையால் காதலியை அடித்து கொள்ளையிட்ட காதலன் தேடப்படுகிறார்

வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண் (காதலி) காதலனால் காயமடைந்தார். அதுமட்டுமின்றி அந்த 33 வயதுடைய பெண்ணிடம் கடந்த புதன்கிழமை, மெந்தாரி பிசினஸ் பார்க் உணவகத்தில் இருந்தபோது, ​​சந்தேக நபரால் கொள்ளையடிக்கப்பட்டார்.

இரவு 11.30 இச்சம்பவத்தில், உணவகத்தில் இருந்த பாதிக்கப்பட்ட நபரிடம் அதிருப்தி அடைந்த சந்தேக நபர் காதலியை தாக்கிவிட்டு பணம், கைத்தொலைபேசி மற்றும் நகைகளை எடுத்துச் சென்றுள்ளார். இச்சம்பவத்தால் முகத்தில் காயம், மூக்கு உடைந்ததோடு உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. பின்னர் மேல் நடவடிக்கைக்காக நேற்று சுங்கை வே காவல் நிலையத்தில் புகார் அளிக்க அவர் ஆஜரானார்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் முகமது ஃபக்ருதின் அப்துல் ஹமீத் கூறுகையில், சந்தேக நபர் தனது காதலிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பொறாமை கொண்டதாகவும், பாதிக்கப்பட்டவரை அடித்து, அவரது உடைமைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. தண்டனைச் சட்டத்தின் 394 வது பிரிவின்படி மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் இன்று ஹரியான் மெட்ரோவிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here