துன் டாக்டர் லிம் சோங் யூ நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் மூவர் பலி

ஜார்ஜ்டவுன், ஜூலை 17 :

துன் டாக்டர் லிம் சோங் யூ நெடுஞ்சாலையில், இன்று அதிகாலை நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர், குறைந்தது மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் அதிகாலை 4.40 மணியளவில் நடந்ததாக நம்பப்படுகிறது. இந்த விபத்தின் வீடியோ மற்றும் சில படங்கள் இன்று அதிகாலை முதல் சமூக வலைதளங்களில் பரவியது.

பல மோட்டார் சைக்கிள்கள் கார்களுடன் மோதி விபத்துக்குள்ளானது எனத் தெரிகிறது.

உயிரிழந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் பினாங்கு மருத்துவமனைக்கு (HPP) மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து இதுவரை காவல்துறை அல்லது மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here