பாலிங்கில் ஆண் யானை பிடிப்பட்டது

பாலிங் அருகே உள்ள கம்போங் ஶ்ரீ கெட்டெங்காவில் பயிர்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் ஆண் யானை, கெடா வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காத் துறையின் (வனவிலங்கு) யானைகள் பிடிப்புப் பிரிவினரால் (UTG) நேற்று பிடிபட்டது.

கெடா வனவிலங்கு இயக்குனர் ஜமாலுல் நசீர் இப்ராஹிம் கூறுகையில், 10 முதல் 12 வயதுக்கு உட்பட்ட யானை, ரப்பர் தோட்டத்தில் காலை 10 மணியளவில் பிடிக்கப்பட்டது.

பயிர்களை சேதப்படுத்தியதாகவும், விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் நம்பப்படும் யானையைப் பார்த்ததாக கடந்த ஜூலை 15 ஆம் தேதி காலை 9 மணியளவில் பாலிங்கில் உள்ள பெர்ஹிலிட்டன் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது… பின்னர் ஆண் யானை பிடிபட்டது, அது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.

ஜமாலுல் நசீர், யானை 10 அங்குல அளவு மற்றும் ஏழு அங்குல நீளமுள்ள தந்தங்கள் எனவும்  பல முறை அப்பகுதியில் பலர் அந்த யானையை பார்த்திருப்பதாகவும் கூறினார்.

தற்சமயம் யானையை இடமாற்றம் செய்வதற்கான இடத்தை நாங்கள் தீர்மானிக்கவில்லை. அதற்கு முன்னதாக, யானை பிடிபட்ட பகுதியை தொடர்ந்து கண்காணிப்போம். தற்பொழுது காலையிலும் மாலையிலும் உணவளிப்போம் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here