பாகாங் மாநிலத்தில் இந்தாண்டு 11,951 சாலை விபத்துகள் பதிவு- 213 பேர் மரணம்

குவாந்தான், ஜூலை 20 :

பகாங் மாநிலத்தில் கடந்த ஏழு மாதங்களில் சாலை விபத்து வழக்குகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பகாங் சாலைகளில் காவல்துறையினரின் கண்காணிப்பு முடுக்கிவிடப்படும் என்று மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ரம்லி முகமட் யூசுப் கூறினார்.

புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி முதல் நேற்று (ஜூலை 19) வரை 11,951 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளதுடன் 213 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளன, இதே காலகட்டத்தில் கடந்த வருடம் 7,759 சாலை வழக்குகளும், 156 இறப்புகளும் பதிவாகின.

எனவே, உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்க, கவனமாக வாகனம் ஓட்டுவதற்கு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று ரம்லி கூறினார்.

“சிலர் ஒழுக்கத்துடன் வாகனங்களை ஓட்டும்போது, ​​அஜாக்கிரதையாக இருப்பவர்களால் பிரச்சினைகளை உண்டாக்குகிறார்கள்…, சிலர் சாலையில் யாரும் இல்லாதது போல் பொறுப்புணர்வின்றி வண்டி ஓட்டி அப்பாவிகளை ஆபத்தில் சிக்க வைக்கிறார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here