கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,144 மூத்த குடிமக்கள் மருத்துவமனைகளில் கைவிடப்பட்டுள்ளனர்

2018 முதல் 2022 வரை நாடு முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மருத்துவமனைகளில் கைவிடப்பட்டுள்ளனர். பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரினா ஹருன், புள்ளிவிவரங்களை வெளியிடுகையில், புறக்கணிக்கப்பட்ட 2,144 மூத்த குடிமக்களில் 656 ஆண்கள் மற்றும் 258 பெண்களை உள்ளடக்கிய 914 பேர் வெற்றிகரமாக அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

2021 ஆம் ஆண்டில் மட்டும் 752 மூத்த குடிமக்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களால் மருத்துவமனைகளில் கைவிடப்பட்டதாக ரினா கூறினார். அவர்களில் 231 ஆண்களும் 109 பெண்களும் உள்ளனர் மற்றும் அவர்கள் சமூகநல பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தம் 1,230 மூத்த குடிமக்கள் — 650 ஆண்கள் மற்றும் 380 பெண்கள் — தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் அடுத்த உறவினர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, பெரும்பாலான வழக்குகளில் மனைவி, குழந்தைகள் அல்லது உடன்பிறப்புகள் இல்லாத மூத்த குடிமக்கள் உள்ளனர் என்று நேற்றைய நாடாளுமன்ற எழுத்துப்பூர்வ பதிலில் அவர் கூறினார்.

கடந்த ஐந்தாண்டுகளில் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட மூத்த குடிமக்களின் பாலினம், கைவிடப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் அவர்களின் மொத்த தொகையை தெரிவிக்குமாறு அமைச்சகத்திடம் கேட்ட டான் கோக் வையின் (பக்காத்தான் ஹராப்பான்-செராஸ்) கேள்விக்கு ரீனா பதிலளித்தார்.

சமூக சேவையாளர்கள் பொதுவாக மூத்த குடிமக்களின் அடையாள அட்டைகளை சரிபார்த்தல், குடும்பங்களைத் தொடர்புகொள்வது, வீடுகளுக்குச் செல்வது அல்லது தேசியப் பதிவுத் திணைக்களத்தின் அமைப்பு மூலம் அவர்களைக் கண்டறிவதன் மூலம் அவர்களைக் கண்டுபிடிப்பார்கள் என்று அவர் கூறினார்.

இருப்பினும், தித்திவாங்சா நாடாளுமன்ற உறுப்பினரான ரீனா, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மூத்த குடிமக்களை வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு நெருங்கிய உறவினர்கள் மறுக்கிறார்கள் என்று கூறினார். குடும்பப் பிரச்சனைகள் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாமை ஆகியவை குறிப்பிடப்பட்ட காரணங்களில் அடங்கும். சிலர் மூத்த குடிமக்களைப் பற்றிய எந்த தகவலையும் வழங்க முடியாதவர்களாகவும் இருக்கின்றனர்.

மூத்த குடிமக்கள் தங்கள் அடையாள அட்டை எண், உறவினர்களின் தொலைபேசி எண், அவர்களின் நண்பர்களின் அடையாளம் அல்லது வீட்டு முகவரி பற்றிய துல்லியமான தகவல்களை வழங்க முடியாதபோது மருத்துவமனைகள் சிரமங்களை எதிர்கொள்கின்றன.

“சில சந்தர்ப்பங்களில், அவர்கள் (கைவிடப்பட்ட மூத்த குடிமக்கள்) வீடற்றவர்கள் மற்றும் ‘kutu rayau (அலையாட்கள்), அவர்கள் பொது உறுப்பினர்களால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். போதைப்பொருள் மற்றும் மது பாவனையில் ஈடுபட்டவர்களும் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, மூத்த குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க உதவும் மூத்த குடிமக்கள் மசோதாவை, அரசு தயாரித்துள்ளதாக ரீனா கூறினார். மசோதாவின் வரைவு இன்னும் சம்பந்தப்பட்ட மற்றவர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here