ஸ்கூடாய் சுங்கச்சாவடியில் மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் சிறப்பு நடவடிக்கையில் 1,294 அபராதங்கள் விதிப்பு

ஜோகூர் பாரு, ஜூலை 22 :

இங்குள்ள ஸ்கூடாய் சுங்கச்சாவடியில் மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் சிறப்பு நடவடிக்கையின் போது, சாலைப் போக்குவரத்துத் துறையினர் மொத்தம் 1,294 அபராதங்கள் விதித்தனர்.

ஜோகூர் சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குநர் அஸ்மில் ஜைனல் அட்னான் கூறுகையில், “ஓப்ஸ் காஸ் ரெண்டாஸ் செம்பாடான்” என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, ஜோகூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவில் உள்ள ஜேபிஜே கிளைகளுடன் இணைந்து நடத்திய ஒரு கூட்டு நடவடிக்கையாகும்.

“இந்த சிறப்பு நடவடிக்கை ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி ஜூலை 22 ஆம் தேதி முடிவடைந்தது மற்றும் இது தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் உள்ள மூன்று மாநிலங்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

“சாலைப் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக கனரக வாகனமோட்டிகள், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 மற்றும் நிலப் பொதுப் போக்குவரத்துச் சட்டம் 2010 ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதே இதன் பிரதான நோக்கமாகும்” என்று அவர் கூறினார்.

இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 22) வடக்கு-தெற்கு விரைவுச்சாலை ((NSE) ஸ்கூடாய் சுங்கச்சாவடியில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here