ரப்பர் தோட்டத்திலுள்ள கடையில் சட்டவிரோதமாக சேமிக்கப்பட்ட பெட்ரோல் பறிமுதல்

கெடாவின் சாங்லுன் ரப்பர் தோட்டத்தில் உள்ள ஒரு கடையில் பெட்ரோல் முறைகேடு நடந்திருப்பது அதிகாரிகளின் சோரனையில் அம்பலமானது.

கெடா உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சகத்தின் (KPDN) அதிகாரிகளால் நேற்றுக் காலை 7 மணிக்கு நடந்த சோதனையில், சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்ட எரிபொருள் சேமிப்புக் கடையின் குட்டு வெளிப்பட்டது.

கெடா KPDN அலுவலகத்தின் புலனாய்வுப் பிரிவின் ஆதாரங்களின் அடிப்படையில், இந்த நடவடிக்கை கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்டதாக கெடா KPDN இயக்குநர் அஃபெண்டி ரஜினி காந்த் கூறினார்.

குறித்த ஆய்வின் விளைவாக, கிட்டத்தட்ட 2,000 லிட்டர் பெட்ரோல் கொண்ட ஒன்பது யூனிட் இன்டர்மீடியட் பல்க் கொள்கலன் (ஐபிசி டேங்க்) கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

“சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேறு சில உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

“கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலின் மதிப்பிடப்பட்ட பெறுமதி RM4,100 ஆகும், அதே நேரத்தில் கைப்பற்றப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு RM12,700 என மதிப்பிடப்பட்டுள்ளது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் வழங்கல் கட்டுப்பாடு சட்டம் 1961 இன் பிரிவு 21 இன் படி இவ்வழக்கின் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அஃபெண்டி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here