இன்று தேசிய விருதுகள் அறிவிப்பு: சூர்யாவுக்கு விருது கிடைக்குமா?

68வது தேசிய விருதுகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது சூரரைப் போற்று படத்தில் சிறப்பாக நடித்த சூர்யாவுக்கு கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.இது குறித்து அவர்கள் ட்வீட் செய்து வருவதால் #Sooraraipottru என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது.

ஆஸ்கர் வரை சென்ற சூரரைப் போற்றுக்கு மத்திய அரசு தேசிய விருது அளித்து கவுரவிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. சூர்யாவுக்கு மட்டும் விருது கிடைத்தால் இது அவர் பெறும் முதல் தேசிய விருது ஆகும். கடந்த ஆண்டு அசுரன் படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதும், அந்த படத்தில் நடிப்பால் மிரட்டிய தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், விஸ்வாசம் படத்தில் வந்த கண்ணான கண்ணே பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது டி. இமானுக்கும், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக சிறந்த ஜூரி விருது பார்த்திபனுக்கும், கேடி (எ) கருப்பு துரை படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதும் கிடைத்தது. கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் தமிழ் சினிமாவுக்கு அதிகம் விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here