போதைப்பொருள் செயல்முறை ஆய்வகத்தை நடத்தி வந்த முன்னாள் மலேசிய போலீஸ் அதிகாரி இந்தோனேசியாவில் கைது

ஜகார்த்தா, ஜூலை 23 :

கடந்த செவ்வாயன்று, ரியாவ் தீவுகளில் ஒரு மலேசிய குடிமகன் உட்பட மூன்று உள்ளூர் நபர்களை இந்தோனேசியாவின் தேசிய போதைப்பொருள் நிறுவனம் கைது செய்தது.

இந்தோனேசிய தேசிய போதைப்பொருள் நிறுவன தலைவர், இன்ஸ்பெக்டர் ஜெனரல் பெட்ரஸ் கோலோஸ் கூறுகையில், கார்ப்ரல் அந்தஸ்தில் உள்ள முன்னாள் போலீஸ் அதிகாரியான மலேசியர், சுகாஜாடி ஹவுசிங், பாடாமில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இயங்கி வந்த ஆய்வகத்தில் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டார்.

அவ்வீட்டிலிருந்து போதைப்பொருள் செயலாக்க கருவிகள், பரிசோதனைக்கான திரவம் மற்றும் 5.1 கிலோகிராம் ஷாபு உள்ளிட்ட பல சான்றுப்பொருட்களை அவரது தரப்பு மீட்டுள்ளனர் என்றார்.

அவரது கூற்றுப்படி, முதற்கட்ட பரிசோதனையின் முடிவுகளில், சியாபு மலேசியாவில் பதப்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டது என்றும் அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடரும் என்றும் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

 

-பெர்னாமா-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here