ஃபெடரல் நெடுஞ்சாலையில் நடந்து சென்ற பெண்ணை மோதிவிட்டு, தப்பித்துச் சென்ற வாகன ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு

ஷா ஆலாம், ஜூலை 24 :

நேற்றிரவு 12 மணியளவில் ஃபெடரல் நெடுஞ்சாலையின் 7 ஆவது கிலோமீட்டரில் ஒரு பெண்ணை மோதிவிட்டு, தப்பித்துச் சென்ற வாகன ஓட்டுநரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஷா ஆலாம் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் கூறுகையில், ஷா ஆலாம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவின் மூலம் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு அறிக்கை கிடைத்தது என்றார்.

முதற்கட்ட விசாரணையில், 33 வயதான அந்தப் பெண் நடந்து சென்றபோது , கோலாலம்பூரில் இருந்து கிள்ளான் நோக்கி வந்த வாகனம் மோதியதாக நம்பப்படுகிறது.

“கருப்பு உடை அணிந்திருந்த பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

உடல் பிரேத பரிசோதனைக்காக ஷா ஆலாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987ன் பிரிவு 41-ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

விபத்து தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள், போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவின் (பிஎஸ்பிடி) புலனாய்வு அதிகாரி ஐபிடி ஷா ஆலம், இன்ஸ்பெக்டர் முகமட் ஹஸ்ருல் சுஹியாமி ஆகியோரை 011-31215697 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here