2026 ஆம் ஆண்டின் சிலாங்கூர் குடிநீர் வீரன் திருவிழா! மந்திரி பெசார் அமிருடின் சாரி-

(எஸ்.ஷண்முகம்)

கோலா சிலாங்கூர், 
சிலாங்கூர் மாநில அளவில் முதன்முறையாக நடத்தப்படும் சிலாங்கூர் குடிநீர் வீரன் திருவிழா 2026″ (Karnival Wira Air Selangor 2026) நிகழ்வில் கலந்துகொண்டு தொடக்கி வைத்து நீர் என்பது உயிரினங்களின் அடிப்படைத் தேவையாகவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய தூணாகவும் விளங்குவதாக டத்தோஸ்ரீ அமிருடின் பின் ஷாரி கூரினார்.

தூய்மையான, தடையற்ற குடிநீர் விநியோகம் தொழில் வளர்ச்சி, முதலீட்டாளர்களின் நம்பிக்கை, பொதுமக்களின் நல்வாழ்வுக்கு அவசியமானது. எனவே, நீர்வளத்தைப் பாதுகாப்பது சேவை வழங்குநர்களின் பொறுப்பு மட்டுமல்லாது, மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பாகும்.

    அமேசான் வெப் சர்வீசஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து குழாய் கசிவுகளைக் கண்டறியும் நவீன சென்சார் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மூலம் வீடுகளுக்கான நீர் சேமிப்புக் கருவிகளை வழங்குவது போன்ற கூட்டு முயற்சிகள் பாராட்டுவதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமாகிய என அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, 2019ஆம் ஆண்டு முதல் ஆயர் சிலாங்கூர் அமைப்பு 100க்கும் மேற்பட்ட பள்ளி விழிப்புணர்வுப் பயணங்களை மேற்கொண்டுள்ளது. மேலும், இந்த நிகழ்வில் 90 பள்ளிகள், 1,500 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
2025-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, சிலாங்கூர், கோலாலம்பூர் புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் ஒரு நபரின் சராசரி தினசரி நீர் பயன்பாடு 240 லிட்டராக உள்ளது. இது 2030-ஆம் ஆண்டிற்கான தேசிய இலக்கான 180 லிட்டரை விட அதிகமாகும் என டத்தோஸ்ரீ அமிருடின் சாரி சொன்னார்.
எனவே, பொதுமக்கள் நீர் சேமிப்பை ஒரு பழக்கமாகவே மாற்றிக்கொள்ள வேண்டும்.

இளைய தலைமுறையினர், குறிப்பாக மாணவர்கள், “குடிநீர் வீரர்கள்” (Wira Air) நீர் சேமிப்புச் செய்தியைக் குடும்பத்தினரிடமும் சமூகத்தினரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நிறைவாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஏற்பாடு செய்த ஆயர் சிலாங்கூர், சிலாங்கூர் பல்கலைக்கழகம், கல்வித் துறை அதிகாரிகளுக்கு தாம் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
மேலும், இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் எங் சியான், ஆயர் சிலாங்கூரின் தலைமை நிர்வாக அதிகாரி அடாம் சபியான் பின் கஸாலியும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here