பண்டார் பெனாவார் அறிவியல் உயர்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியவர், 4 மணி நேரத்தின் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்

கோத்தா திங்கி, ஜூலை 24 :

இங்குள்ள இங்குள்ள பண்டார் பெனாவாரில் உள்ள பண்டார் பெனாவார் அறிவியல் உயர்நிலைப் பள்ளியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 44 வயது ஆடவர், சுமார் நான்கு மணி நேரத்தின் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஹுசின் ஜமோரவின் கூற்றுப்படி, மீட்பு நடவடிக்கைக்கு பெனாவார் மற்றும் செபனா கோவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள், பேயு டாமாய் ஹெல்த் கிளினிக் ஊழியர்கள் மற்றும் Prospek Qaraeez நிறுவனத்தின் இண்டா வாட்டர் ஒப்பந்ததாரர் குழுவும் உதவியது என்றார்.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர் உட்பட Prospek Qaraeez நிறுவனத்தின் மொத்தம் நான்கு ஊழியர்கள், பள்ளியில் உள்ள கழிவுநீர் ஆலையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவது கண்டறியப்பட்டது.

“அப்போது, ​​கழிவுநீர் ஆலையின் தொட்டிக்கு அருகில் உள்ள நிலம் இடிந்து விழுந்ததில், பாதிக்கப்பட்டவர் நிலத்தினுள் சிக்கி இடுப்பு வரை புதைக்கப்பட்டார்.

அதே நேரத்தில் “மற்றய மூன்று தொழிலாளர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.

தற்போது “பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை சீராக உள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை மூலம் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜோகூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த நடவடிக்கை இன்று மாலை 6.50 மணிக்கு முடிவடைந்தது என்றார்.

அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக மலேசிய சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here