கிளாந்தானில் RM46.9 மில்லியன் இழப்புகள் சம்பந்தப்பட்ட வணிக குற்ற வழக்குகள் பதிவு

கோத்தா பாரு, ஜூலை 26 :

கிளாந்தானில் 2020 முதல் இந்த ஆண்டு ஜூன் வரை, மொத்தம் 2,271 வணிக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் RM46.9 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.

மொத்தத்தில், 1,995 வழக்குகள் அல்லது 87.8 சதவீதம் பேர் இணைய மோசடியில் ஈடுபட்டதாக மாநிலத்தின் பதில் போலீஸ் தலைவர், டத்தோ முஹமட் ஜாக்கி ஹாருன் கூறினார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 30 வரை மாக்காவ் ஊழல் சம்மந்தப்பட்ட
RM3.83 மில்லியன் இழப்புகளுடன் 110 வழக்குகளை பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

“இந்த ஆண்டு அடிக்கடி பதிவாகும் மற்ற வழக்குகள் ஈ-காமர்ஸ் மோசடிகள் (RM663,000), இணைய முதலீடு (RM1.23 மில்லியன்), இல்லாத கடன்கள் (RM413,000) மற்றும் ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி (RM1.05 மில்லியன்) என்பன பதிவாகின.

“பார்சல் அல்லது காதல் மோசடி (RM348,000), சமூக ஊடகங்களில் தொடர்பு கொண்டு ஆள்மாறாட்டம் செய்து பணம் பறித்தல் (RM34,300) மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கல் மோசடி (RM47,100) குறித்தும் காவல்துறைக்கு அறிக்கைகள் கிடைத்தன,” என்று, நேற்று இரவு மலேசியா காவல்துறையில் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் 2022 நிகழ்வில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் கூறினார்.

‘மோசடி செய்பவர்களை ஒன்றாக எதிர்த்துப் போராடுவோம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் இந்த பிரச்சாரம், சமூக விழிப்புணர்வை அதிகரிக்கவும், ஏமாற்றப்படும் அபாயத்தைத் தவிர்க்கவும், மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் சமீபத்திய வழிமுறைகளையும், அவற்றை தடுப்பதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பகிர்ந்துகொள்ளுதலாகும் ‘ என்று முகமட் ஜாக்கி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here