4 வயது சிறுமியை துடைப்பத்தால் தாக்கி துஷ்பிரயோகம் செய்த தம்பதியினருக்கு 20,000 வெள்ளி அபராதம்

பாங்கி, ஜூலை 27 :

4 வயது சிறுமியை துடைப்பத்தால் தாக்கி துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாடடப்பட்ட திருமணமான தம்பதியருக்கு, இன்று, இங்குள்ள பந்தர் பாரு பாங்கி அமர்வு நீதிமன்றம் 20,000 வெள்ளி அபராதம் விதித்தது, தவறினால் 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், பாதிக்கப்பட்டவருக்கு உடலில் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டை அவர்கள் ஒப்புக்கொண்டதை அடுத்து, வர்த்தகர் அமிரா ஹம்சா, 28, மற்றும் அவரது சிங்கப்பூர் கணவர், முஹமட் ஃபிட்ரி ஜஸ்மானி ஜோஸ்மானி, 30, ஆகியோருக்கு நீதிபதி எஃபாண்டி நஜிலா அப்துல்லா இத் தண்டனையை விதித்தார்.

ஏப்ரல் முதல் ஜூலை 18 , 2022 வரை நண்பகல் 1.25 மணிக்கு செமினியில் உள்ள Eco Majestic இல் உள்ள அவர்களது இல்லத்தில், தம்பதியினர் இந்தக் குற்றத்தைச் செய்தனர்.

குழந்தைச் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 34 உடன் படிக்கப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது RM50,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குற்றம் சாட்டப்பட்ட இருவர் தரப்பில் எந்த வக்கீலும் ஆஜராகவில்லை.

வழக்கின் உண்மைகளின்படி, புகார்தாரரும் அமிராவின் ஊழியருமான இந்தோனேசியப் பெண்ணின் குழந்தையை,, ஒரு ஹங்கர் மற்றும் துடைப்பத்தால் அடிப்பது தொடர்பான காணொளி வைரலானது.

போலீஸ் விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட அமிராவை ‘மம்மி’ என்று அழைக்கும் அந்த குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே நீதிமன்றத்தில், சிங்கப்பூரியரான முஹமட் ஃபித்ரிக்கு, மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட அதிகமாகத் தங்கியதற்காக குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், அவருக்கு RM10,000 அபராதம் விதிக்கப்பட்டது, தவறினால் ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இது 1959/63 குடியேற்றச் சட்டம் பிரிவு 15(1)(c) இன் கீழ், ஜூலை 22 அன்று அதிகாலை 2.30 மணிக்கு அதே இடத்தில் அவர் குற்றத்தைச் செய்ததாக கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here