RM16.4 மில்லியன் மதிப்புள்ள சிகரெட்டுகள் கிளாந்தான் போலீசாரால் பறிமுதல்

கோத்தா பாரு, ஜுலை 27 :

நேற்று அதிகாலை 3.30 மணியளவில், கிளாந்தா காவல்துறையினர் கம்போங் பாசீர் பெக்கான் தெங்கா, வகாஃப் பாருவில் நடத்திய நடவடிக்கையில் மொத்தம் RM1.64 மில்லியன் மதிப்புள்ள 900,000 வெள்ளை சிகரெட்டுகளை கைப்பற்றப்பட்டன.

கிளந்தான் காவல்துறையின் பதில் தலைவர், டத்தோ முகமட் ஜாக்கி ஹருன் கூறுகையில், முன்னதாக, குவாந்தானில் உள்ள பொது நடவடிக்கைப் படையின் 7வது பட்டாலியன் உறுப்பினர்கள் நகர மத்தியிலுள்ள கம்போங் பாசீரை நோக்கி அதிவேகமாக இரண்டு கார்களை ஓட்டிச் சென்றதைக் கண்டனர்.

உடனே உறுப்பினர் கிராமப் பகுதிக்குள் நுழைந்து சம்பந்தப்பட்ட வாகனத்தைக் கண்டுபிடிக்க முயன்றார்.

‘‘ஆற்றங்கரை பகுதியில் சோதனை நடத்தியபோது, ​​என்ஜின் அணைக்கப்பட்டு, ஓட்டுநரின் பக்கவாட்டு கதவு திறந்த நிலையில், பதிவு எண் இல்லாத ஒரு பெரோடுவா கெனாரியைக் கண்டோம்.

“கார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் சோதனை செய்ததில் கடத்தப்பட்ட சிகரெட்டுகள் என நம்பப்படும் சிகரெட்டுகளை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்,” என்று அவர் இன்று கிளந்தான் காவல் படைத் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் அதிகாரிகள் இருப்பதை உணர்ந்தவுடன், தப்பி ஓடிவிட்டதாக நம்பப்படுகிறது மேலும் இந்த நடவடிக்கையில் யாரும் கைது செய்யப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here