வரலாற்றுச் சிறப்புமிக்க கட்சி தாவல் தடை சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

மக்களவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்சி தாவல் தடை சட்ட மசோதா  வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக 209 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்கெடுப்பின் போது 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை.

நேற்றும் இன்றும் 54 நாடாளுமன்ற பங்கேற்ற விவாதங்களுக்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் இரண்டாவது வாசிப்புக்காக நேற்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பினால் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்று இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்பில் தேர்ச்சி பெற்றது.

இஸ்மாயிலுக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) முக்கிய நிபந்தனைகளில் ஒன்று கட்சி தாவல் எதிர்ப்பு மசோதாவை தாக்கல் செய்வது உள்ளடக்கியதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here