டான்ஸ்ரீ அப்துல் காலித் இப்ராகிம் ஷா ஆலம் அரச கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்

ஷா ஆலம்: முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அப்துல் காலித் இப்ராகிமின் உடல் ஷா ஆலம் அரச கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷாவும் கலந்து கொண்டார்.

முன்னதாக, ஜோஹூர் தொழுகைக்குப் பிறகு சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜீஸ் ஷாவில் இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டது. கிராண்ட் இமாம் முஹம்மது ஃபர்ஹான் விஜயா தலைமையில், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.

மேலும் அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் பல சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அப்துல் காலித் நேற்று இரவு 11.08 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள இருதய இரத்த நாள சென்ட்ரல் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 78. அப்துல் காலித் இருதயத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஏப்ரல் 23 முதல் வார்டு செய்யப்பட்டதாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அவர் மனைவி புவான் ஸ்ரீ சல்பியா துனட், நான்கு குழந்தைகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளை விட்டுச் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here