Federal Territories Indian Development Foundation இயக்குநர் கோவிந்தராஜு மீது குற்றச்சாட்டு

பட்டர்வொர்த், Federal Territories Indian Development Foundation  இயக்குநர் ஒருவர், அறக்கட்டளைக்குச் சொந்தமான RM86,000 மதிப்புள்ள சொத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக 11 குற்றச்சாட்டுகள்  செஷன்ஸ் நீதிமன்றத்தில் எம்.கோவிந்தராஜு 65, என்பவர் மீது கொண்டு வரப்பட்டது.   நீதிபதி சுல்ஹஸ்மி அப்துல்லா முன் அனைத்து குற்றச்சாட்டுகளும் வாசித்தபின் தான் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார்.

அனைத்து குற்றச்சாட்டுகளிலும், ஆலோசகராக இருந்த கோவிந்தராஜு, கடந்த ஆண்டு ஆகஸ்டு 25 அன்று ஜாலான் செயின் ஃபெரியில் உள்ள தாமான் இண்டாவாசியில் உள்ள வங்கியில் ஃபெடரல் டெரிட்டரிஸ் இந்தியா டெவலப்மென்ட் பவுண்டேஷனுக்குச் சொந்தமான RM86,000 மதிப்பை நேர்மையற்ற முறையில் முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 403 இன் கீழ் குற்றச்சாட்டுகள் அமைக்கப்பட்டன. அதே இடத்தில் மற்றும் தேதியில் அதே அறக்கட்டளையைச் சேர்ந்த RM86,000 மதிப்புள்ள சொத்து சம்பந்தப்பட்ட குற்றவியல் நம்பிக்கை மீறல், தண்டனைச் சட்டத்தின் 406ஆவது பிரிவின் கீழ் உருவாக்கப்பட்ட 11 மாற்றுக் குற்றச்சாட்டுகளையும் கோவிந்தராஜூ மறுத்து விசாரணை கோரினார்.

அவர் ஒவ்வொரு குற்றச்சாட்டிலும் ரிங்கிட் 2,000 ஜாமீன் பெற அனுமதிக்கப்பட்டார். மேலும் மாதம் ஒருமுறை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) அலுவலகத்தில்  ஆஜராகுமாறும், அத்துடன் அவரது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார். நீதிமன்றம் செப்டம்பர் 1 ஆம் தேதி விசாரணைக்கான தேதியை  குறிப்பிடப்பட்டது. எம்ஏசிசியின் துணை அரசு வக்கீல் முகமட் அபிஃப் அலி வழக்கு தொடர்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here