மது போதையால் மாறி போன DIBW 2023 விழா

டேசாரு இண்டர்நேஷனல் பைக் வீக் (DIBW) 2023 விழா, வெள்ளிக்கிழமை முதல் டேசாரு கடற்கரையில் நடைபெற்றது. இதில் பங்கேற்பாளர்களின் இரு குழுக்களை உள்ளடக்கியதாக நம்பப்படும்  அடிதடியால் விழா அடியோடு மாறி போனது. சமூக ஊடகங்களில் வைரலான பல வீடியோக்கள் பிற்பகலில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததைக் காட்டுகின்றன. இது இரவு வரை தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.

பகலில் நடந்த சம்பவத்தைக் காட்டும் 4 நிமிடம் 25 வினாடிகள் நீடிக்கும் வீடியோவில், ஒரு சில போலீசார் வாக்குவாதத்தைக் கட்டுப்படுத்துவதை காணலாம். இருப்பினும், இரவில் நடந்த சம்பவத்தைக் காட்டும் மற்றொரு 76 வினாடி வீடியோ, சம்பந்தப்பட்டவர்களிடையே நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை வீசிய சம்பவம் ஏற்படும் வரை நிலைமை கட்டுப்பாட்டை மீறியதாகத் தெரிகிறது. வீடியோவின் அடிப்படையில், ரகளையில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் குடிபோதையில் இருந்ததாக ஒரு நபரின் குரல் கேட்டது. இந்த சம்பவம் அனைத்துலக பங்கேற்பாளர்களை உள்ளடக்கியது. ஆனால் அதே நேரத்தில் உள்ளூர் பங்கேற்பாளர்களும் இருந்தனர்.

சம்பவம் தொடர்பான உறுதிப்படுத்தல் மற்றும் மேலதிக தகவல்கள் போலீசாரிடம் இருந்து பெறப்பட்டு வருகின்றது. DIBW 2203 என்பது ஒரு அனைத்துலக திருவிழா மற்றும் கண்காட்சியாகும். இது மோட்டார் வாகன வாழ்க்கை முறையை கொண்டாட மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை திருவிழா சுமார் 100,000 பார்வையாளர்களை ஈர்த்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட DIBW இன் நோக்கம், உள்ளூர் கலாச்சாரம், உணவு வகைகள் மற்றும் விளையாட்டுகளை ஒரே நேரத்தில் ஊக்குவிக்கும் அதே வேளையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை ஒற்றுமையாகவும், மோட்டார் சைக்கிள் ஓட்டும் வாழ்க்கை முறையின் கொண்டாட்டத்தை ஒன்றிணைப்பதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here