RM19,250 மதிப்புள்ள போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கியை புதர்களுக்குள் மறைத்து வைத்திருந்த மூவர் கைது

கோத்தா பாரு, ஆகஸ்ட் 1 :

கடந்த வாரம் தும்பாட் அருகே கம்போங் கெடெமிட்டில் உள்ள ஒரு வீட்டின் அருகே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், RM19,250 மதிப்புள்ள போதைபொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று நபர்களை போலீசார் கைது செய்ததுடன் ஒரு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

27 முதல் 39 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் கடந்த புதன் கிழமை இரவு 11 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் கைது செய்யப்பட்டதாக கிளாந்தான் காவல்துறை பொறுப்பதிகாரி, டத்தோ முஹமட் ஜாக்கி ஹருன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், வீட்டின் அருகே உள்ள புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 29 தோட்டாக்கள் அடங்கிய கொள்கலனுடன், பிளாஸ்டிக் கொள்கலனில் இருந்த S&W .357 மேக்னம் ரக துப்பாக்கியை போலீசார் கண்டுபிடித்தனர்.

“அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட விசாரணையில், 800 horse மாத்திரைகள் மற்றும் 225 கிராம் எடையுள்ள கஞ்சா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன, இவை அனைத்தும் RM19,250 மதிப்புள்ளவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

“மூன்று சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் மூவரும் மெத்தபெட்டமைனுக்கு நேர்மறையான பதிலை பெற்றனர். மேலும், ஒவ்வொரு சந்தேக நபரும் மூன்று முதல் 11 வழக்குகள் வரையிலான கடந்தகால குற்றங்களின் பதிவைக் கொண்டுள்ளனர், ”என்று அவர் இன்று கிளாந்தான் காவல் படைத் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் கூறினார்.

இது தவிர, அவர்களிடமிருந்து Honda Jazz ரக car, ஒரு Yamaha Y15ZR ரக மோட்டார் சைக்கிள் மற்றும் RM4,000 மதிப்புள்ள கைக்கடிகாரம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39பி, துப்பாக்கிச் சட்டம் (கடுமையான அபராதம்) 1971 இன் பிரிவு 8 மற்றும் துப்பாக்கிச் சட்டம் 1960 இன் பிரிவு 8 (ஏ) ஆகியவற்றின் படி விசாரணைக்கு உதவ சந்தேக நபர்கள் அனைவரும் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here