பியூஃபோர்ட் பாலத்தில் இருந்து ஆற்றில் தவறி விழுந்த நபர் தீயணைப்பு வீரர்களால் பாதுகாப்பாக மீட்பு

கோத்தா கினாபாலு, ஆகஸ்ட் 2 :

நேற்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) பியூஃபோர்ட் மாவட்டத்தில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த ஒருவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஊழியர்கள் சம்பவம் குறித்து எச்சரிக்கப்பட்டு, ஜாலான் பாரு பியூஃபோர்ட்டிலுள்ள சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 39 வயதான நபரை மீட்டு ஆற்றங்கரைக்கு வெளியேற்றினர்.

மாலை 6.42 மணியளவில் ஹெல்மெட் அணிந்திருந்த நபர், பாலத்தில் இருந்து விழுந்து கிடப்பது கண்காணிப்பு கேமராவில் (in dashcam footage) பதிவாகியுள்ளது.

மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை செயல்பாட்டு இயக்குநர் மிஸ்ரான் பிசாரா கூறுகையில், மாலை 6.48 மணிக்கு சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது.

“அருகில் ரோந்து வந்த எங்கள் அதிகாரிகள் ஆற்றில் இருந்து அந்த நபரை மீட்டனர்,” என்று அவர் கூறினார்.

முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அந்த நபர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இரவு 7.19 மணியளவில் மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here