போலீசாருக்கு RM200 லஞ்சம் கொடுத்த தோட்ட தொழிலாளிக்கு RM10,000 வெள்ளி அபராதம்!

கோல திரெங்கானு, ஆகஸ்ட் 2 :

கடந்த மாதம் கெமாமானில் உள்ள போலீஸ்காரருக்கு RM200 லஞ்சம் கொடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்ட செம்பனைத் தோட்ட தொழிலாளிக்கு, இன்று செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 2) இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் RM10,000 அபராதம் மற்றும் 14 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ரட்சாலி பஹாரி (41) என்பவருக்கு இந்த தண்டனை விதித்த நீதிபதி தாசுகி அலி, அவர் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 10 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

ஜூலை 12 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தனது சிறுநீரை பரிசோதனை செய்து, தன்னை தடுப்பு காவலில் வைக்கக்கூடாது என்பதற்காக ஆயிர் பூத்தே காவல் நிலையத்தில் பணியில் இருந்த லான்ஸ் கார்ப்ரல் ஒருவருக்கு RM200 லஞ்சம் வழங்கியதாக ரட்சாலி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் பிரிவு 17(b) இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here