ஜோகூரில் தம்பதிகளை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் இரு துணை போலீசார் கைது

ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 7 :

இங்குள்ள நகர மையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தம்பதிகளை மிரட்டி, அவர்களிடமிருந்து பணம் பறித்ததாக இரண்டு துணை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

25 மற்றும் 32 வயதுடைய சந்தேகநபர்கள் ஷாப்பிங் வளாகத்தில் பணிபுரிந்து வருவதாக ஜோகூர் பாரு தெற்கு OCPD துணைஆணையர் ரவுப் சிலாமாட் தெரிவித்தார்.

“இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) இரவு 10 மணியளவில் வணிக வளாகத்திற்குப் பின்னால் நடந்தது என்றார்.

“தம்பதிகள் மீது நடவடிக்கை எடுக்காது இருப்பதற்காக இருவரும் RM500 செலுத்துமாறு கோரினர்” என்று அவர் கூறினார்.

இருப்பினும், பாதிக்கப்பட்டவரிடம் போதுமான பணம் இல்லை, எனவே இருவரும் அவரது ஏடிஎம் கார்டு மற்றும் கடவுச்சொல்லைக் கேட்டனர்.

“பாதிக்கப்பட்டவர் தனது கணக்கில் இருந்து RM1,000 எடுக்கப்பட்டதாக அவருக்கு SMS அனுப்பப்பட்டது,” என்று அவர் கூறினார், பாதிக்கப்பட்டவர் சனிக்கிழமை நேற்று (ஆகஸ்ட் 6) காலை 11.23 மணிக்கு காவல்துறையில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இருவரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து RM1,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மிரட்டி பணம் பறிப்பதற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 384 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது சவுக்கடி அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here