தைவான் மீது படையெடுக்க சீனா தயாராகிறது- வெளியுறவு துறை அமைச்சர் தகவல்

தைப்பே, ஆகஸ்ட் 9 :

தைவான் மீது படையெடுப்புக்கு தயாராக சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று தைவான் நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஜோசப் வூ தெரிவித்துள்ளார்.

தைவான் ஜலசக்தி மற்றும் முழு பிராந்தியத்திலும் உள்ள நிலையை மாற்றுவதே சீனாவின் உண்மையான நோக்கம். தைவானை சுற்றி சீனா புதிதாக வான் மற்றும் கடல் பயிற்சிகளை தொடங்கி இருக்கிறது என்றார்.

மேலும் அவர் கூறும்போது, எங்கள் நாட்டுக்குள் யார் வர வேண்டும். யாரை வரவேற்க வேண்டும் என்று சீனா எங்களுக்கு உத்தரவிட முடியாது. தைவான் தனது சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க உறுதி பூண்டு நிற்கும் என்றார்.

அத்தோடு தைவானுக்கு எதிராக சீனா நிச்சயம் போர் தொடுக்கும். தற்போது அது எங்களை பயமுறுத்த முயற்சிக்கிறது. ஆனால் அதற்கு நாங்கள் பயப்படமாட்டோம். எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் எங்களிடம் இருந்து யாரும் பறிக்க முடியாது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here