RM50.4 மில்லியன் நம்பிக்கை மோசடி வழக்கிலிருந்து முன்னாள் உளவுத்துறை தலைவர் விடுதலை..!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 :

12.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (RM50.4 மில்லியன்) மதிப்புள்ள அரசு சொத்துக்களை நம்பிக்கை மோசடி செய்த குற்றச்சாட்டில் இருந்து, முன்னாள் உளவுத்துறை தலைவர், டத்தோ ஹசானா அப்துல் ஹமிட்டை உயர்நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

நீதித்துறை ஆணையர் ரோஸ் மாவார் ரோசைன், இன்று (ஆகஸ்ட் 9) வெளியிட்ட தனது முடிவில், “ஒரு வருடத்திற்கும் மேலாக சுமத்தப்பட்டிருக்கும் இந்தச் குற்றச்சாட்டு இன்னும் அவரின் மீது தீர்க்கப்படாதது ஹசானாவுக்கு பெரிய அநியாயம்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி, ஹசானா இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார், ஆனால் அதன் மூலம் அவர் மீது மீண்டும் குற்றம் சாட்டப்படுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனாலும் வழக்கு தொடுநர் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பாததால், ஹசானா இந்த வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டார்.

மலேசிய வெளி புலனாய்வு அமைப்பின் (MEIO) முன்னாள் இயக்குநர் ஜெனரலான ஹசனா, அக்டோபர் 25,2018 அன்று, மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான 12.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பந்தப்பட்ட CBT குற்றத்தை செய்ததாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஒரு அரசு ஊழியரான ஹசானா, புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் துறையின் ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குநர் ஜெனரலின் அலுவலகத்தில், ஏப்ரல் 30 மற்றும் மே 9, 2018-க்கு இடையில் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 409வது பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் ஆகியவற்றை வழங்குகிறது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, வழக்கு விசாரணை அக்டோபர் 6, 2020 அன்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here