பள்ளியில் தண்ணீர் தொட்டி உடைந்து SMK Melor மாணவர்கள் காயம்

கோத்த பாருவில் அருகே  உள்ள Sekolah Menengah Kebangsaan (SMK) Melor  Ketereh,  இன்று நடைபாதை பாதைக்கு அருகே இருந்த  பள்ளியின் தண்ணீர் தொட்டி உடைந்ததில் பல மாணவர்கள் காயமடைந்தனர்.

மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார். மக்களவை  நடந்த வாய்வழி கேள்வி-பதில் அமர்வுக்குப் பிறகு இந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குணமடைய அனைவரும் பிரார்த்திப்போம் என இன்று தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

உடனடியாக பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு கிளந்தான் கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக ராட்ஸி கூறினார். பள்ளியில் உள்ள வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளதாகவும், பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here