சட்டவிரோதமாக பல் சிகிச்சைப் பயிற்சி அளிப்பவர்கள் குறித்து புகார் அளியுங்கள் என்கிறார் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம்

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 10 :

சட்டவிரோதமாக பல் சிகிச்சைப் பயிற்சி அளிக்கும் தகுதியற்ற நபர்கள் குறித்து, தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக புகாரளிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து அமைச்சகம் அறிந்திருப்பதாகவும், இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

“இவ்வாறு சட்டவிரோதமாக பல் சிகிச்சை கற்கைநெறிகளைத் தடுப்பது, சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் பெறுபவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பயிற்சி சேவைகளை வழங்குபவர்கள் உட்பட அனைவரினதும் பொறுப்பாகும்.

“இவ்வாறு அமைச்சகம் பெறும் ஒவ்வொரு புகாரையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் அத்தோடு அமலாக்க (ரெய்டுகள்) நடவடிக்கைகள் செய்வதற்கு முன் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றார்.

மேலும் இது “பல் மருத்துவச் சட்டம் 2018 [சட்டம் 804] இன் பகுதி VI இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது’ என்று அவர் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 10) கூறினார்.

டாக்டர் நூர் ஹிஷாம் தொடர்ந்து கூறுகையில், தகவல் தெரிந்தவர்கள், புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் பல் சுகாதார திட்டத்தில் அதிகாரப்பூர்வ புகாரை பதிவு செய்யலாம்; அல்லது 03-88834215 ஐ அழைக்கவும்; அல்லது அறிக்கையை ohd@moh.gov.my க்கு மின்னஞ்சல் செய்யவும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here