ஜாலுர் கெமிலாங்கைப் பறக்க விடுவோம் தேசிய தினத்தை குதூகலமாகக் கொண்டாடுவோம்

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தேசிய தினக் கொண்டாட்ட மாதம், 2022 ஜாலுர் கெமிலாங் பறக்கவிடுதல் நிகழ்ச்சியை கடந்த ஜூலை 31ஆம் தேதி தொடக்கி வைத்தார்.


மலேசியக் குடும்பப் பங்கேற்புடன் திறந்த வெளி கோட்பாட்டின் உணர்வோடு மிகவும் கோலாகலமாக இந்நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
ஒன்றிணைந்து நடப்போம், 2022 மலேசியக் குடும்ப வாகன அணிவகுப்பு ஊர்வலம் இந்நிகழ்ச்சியில் கண்கவர் அம்சமாக இடம்பெற்றது. மலேசியக் குடும்பத்தின் விருப்பங்களை ஏந்த நடைபெற்ற ஒன்றிணைந்து நடப்போம் நிகழ்ச்சியில் 15,000 பேர் பங்கேற்றனர். கிட்டத் தட்ட 2.7 கிலோ மீட்டர் தூரம் நடந்தனர். இந்நிகழ்ச்சியில் 2022 மெர்டேக்கா தினக் கொண்டாட்டக் குழுவின் தலைவரும் தொடர்பு, பல்லூடக அமைச்ங்ருமான டான்ஸ்ரீ அனுவார் ஹாஜி மூசா பங்கேற்றார்.


2022 மலேசியக் குடும்ப வாகன அணிவகுப்பு ஊர்வலத்தைத் தொடக்கி வைத்த பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், மலேசியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இந்த ஊர்வலம் ஏககாலத்தில் தொடங்குவதையும் அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 434 வாகனங்கள் ஊர்வலத்தில் பங்கேற்றன. மொத்த பங்கேற்பாளர்கள் 530 பேர். தேசியம், மாநிலம், மாவட்டம், அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றைப் பிரதிநிதித்து வாகனங்கள் பங்கேற்றன.


2022 தேசிய தினக் கொண்டாட்ட மாதம் தொடர்பான நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள் போட்டிகள் ஆகியவை குறித்த கூடுதல் தகவல்களைப் பெறுவதற்கு பொதுமக்கள் http://merdeka360.my/web/ இணைய தளத்தை வலம் வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here