சுங்கை ஆராவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 19வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் காயம்

ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட் 12 :

இன்று, இங்குள்ள சுங்கை ஆராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 19வது மாடியில் இருந்து, தவறி விழுந்து 33 வயது பெண் காயமடைந்ததாக நம்பப்படுகிறது.

அங்கு வசிக்கும் பாதிக்கப்பட்டவர், குர்ஆனின் மொழி பெயர்ப்பு என்று நம்பப்படும் புத்தகத்தை கட்டிப்பிடித்தபடி கீழே விழுந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார்.

பின்னர் அப்பெண், சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு (HPP) கொண்டு செல்லப்பட்டார்.

பயான் பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கைப் பிரிவு தலைவர், முகமட் அவிஸ் கர்னி அப்துல் ரஹ்மான் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பில் நண்பகல் 12.05 மணிக்கு அவரது துறைக்கு அவசர அழைப்பு வந்தது என்றார்.

“அவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது, ​​​​பாதிக்கப்பட்டவர் தரையில் காயங்களுடன் தரையில் படுத்திருக்க காணப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு “மலேசிய சுகாதார அமைச்சகத்தின் (KKM) உறுப்பினர்கள் ஆரம்ப சிகிச்சையை வழங்கினர், மேலும் பாதிக்கப்பட்டவர் மேல் நடவடிக்கைக்காக HPP க்கு அழைத்துச் செல்லப்பட்டார் ,” என்று அவர் இன்று இங்கு தொடர்பு கொண்டபோது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here