சொந்த வாகனத்தில் சிக்கி உயிரிழந்த லோரி ஓட்டுநர்

சிப்பாங்கில் நடந்த பயங்கர விபத்தில் 62 வயது  லோரி டிரைவர் ஒருவர் தனது சொந்த வாகனத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

Sepang OCPD Asst Comm Wan Kamarul Azran Wan Yusof, தொடர்பு கொண்ட போது, ​​இந்த சம்பவம் இங்குள்ள ஜாலான் சியரா 1 கட்டுமான தளத்தில் வியாழன் (ஆகஸ்ட் 11) மாலை 5.36 மணியளவில் நிகழ்ந்ததாக கூறினார்.

பாதிக்கப்பட்டவர் நெடுஞ்சாலையை நோக்கி செல்வதற்காக தளத்தை விட்டு வெளியேறினார். கட்டுமான தளத்தின் நுழைவாயிலில், அவர் கேட்டை மூடுவதற்காக தனது லோரி நிறுத்தினார்.

அப்போது, ​​நிறுத்தப்பட்டிருந்த லாரி பின்னோக்கி உருண்டதில், அவர் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here