J&J டால்கம் பவுடர் விற்பனை 2023 இல் நிறுத்தப்படுகிறது

நியூயோர்க், ஆகஸ்ட் 12 :

பல்வேறு வழக்குகள் அழுத்தங்களிக்கு பிறகு, ஜான்சன் & ஜான்சன் (J&J) நிறுவனம் இறுதியாக 2023 இல் உலகளவில் டால்க் அடிப்படையிலான பேபி பவுடரை விற்பனை செய்வதை நிறுத்துகிறது.

நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு முகங்கொடுத்த பின்னர், இந்த விஷயத்தை அந் நிறுவனம் அறிவித்தது.

“உலகளாவிய போர்ட்ஃபோலியோ மதிப்பீட்டின் ஒரு பகுதியாக, சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடர் உற்பத்திக்கு மாற வணிகரீதியான முடிவை எடுத்தோம்.

“சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடர் ஏற்கனவே உலக நாடுகளில் விற்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

2020 ஆம் ஆண்டில், ஜான்சன் & ஜான்சன் அமெரிக்காவிலும் கனடாவிலும் டால்கம் பவுடரை விற்பனை செய்வதை நிறுத்துவதாக அறிவித்தது, பல வழக்குகளுக்கு மத்தியில் தயாரிப்பின் பாதுகாப்பு குறித்த தவறான தகவலைத் தொடர்ந்து, அதன் தேவை குறைந்து வருகிறது.

கல்நார் (carcinogen) மாசுபாட்டின் காரணமாக அதன் டால்க் தயாரிப்புகள் புற்றுநோயை ஏற்படுத்துவதாகக் கூறி நுகர்வோர் மற்றும் உயிர் பிழைத்தவர்களிடமிருந்து அந் நிறுவனம் சுமார் 38,000 வழக்குகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் அக்கூற்றுக்களை மறுக்கும் நிறுவனம், பல தசாப்தங்களாக அறிவியல் சோதனை மற்றும் ஒழுங்குமுறை அடிப்படையில் அதன் டால்க் பாதுகாப்பானது மற்றும் புற்று நோயை ஏற்படுத்தாது என்பதைக் காட்டுகிறது என்று கூறியது.

2018 இல் ராய்ட்டர்ஸ் நடத்திய ஆய்வில், அதன் டால்க் தயாரிப்புகளில் கல்நார் மற்றும் புற்றுநோய்களை உண்டாக்க கூடிய இரசாயனம் இருப்பதை நிறுவனம் பல தசாப்தங்களாக அறிந்திருந்தது எனக் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here