இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு கூச்சிங் மராத்தான் ஓட்டப்பந்தயம் அக்டோபரில் நடைபெறுகிறது

கூச்சிங், ஆகஸ்ட் 18 :

கூச்சிங் மராத்தான் ஓட்டப்பந்தயம் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்தாண்டு அக்டோபரில் மீண்டும் நடைபெறவுள்ளது.

இதில் கிட்டத்தட்ட 9,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்கின்றனர் என்று சரவாக் சுற்றுலா, படைப்புத் தொழில் மற்றும் கலைநிகழ்ச்சிகள் அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா தெரிவித்தார்.

இதுவரை 8,906 உள்ளூர் மற்றும் அனைத்துலக பங்கேற்பாளர்கள் இந்த மாரத்தானுக்கு பதிவு செய்துள்ளதாகவும், இது அக்டோபர் 2 ஆம் தேதி இங்குள்ள பாடாங் மெர்டேக்காவில் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்தோனேசியா, புருனே, சிங்கப்பூர், பிரிட்டன், கென்யா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து 639 அனைத்துலக பங்கேற்பாளர்கள் உட்பட, சரவாக்கில் இருந்து 5,811 ஓட்டப்பந்தய வீரர்களும், மாநிலத்திற்கு வெளியில் இருந்து 3,095 பேரும் பங்கேற்க உள்ளனர்.

“இது கடைசியாக 2019 இல் நடைபெற்ற கூச்சிங் மராத்தானின் ஏழாவது முறையாகும். இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here