கோத்தா திங்கி, ஆகஸ்ட் 20 :
இங்கு அருகிலுள்ள ஃபெல்க்ரா டுசூன் பாண்டி அருகே, இன்று சனிக்கிழமை இரண்டு கார்கள் மோதிய விபத்தில், இரு பெண்கள் உயிரிழந்தனர் மற்றும் நால்வர் காயமடைந்தனர்.
கோத்தா திங்கி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி, மூத்த தீயணைப்பு அதிகாரி II, இப்ராஹிம் வாஹித் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து அவரது தரப்பிற்கு காலை 10.51 மணிக்கு அவசர அழைப்பு வந்தது.
அதைத் தொடர்ந்து, தீயணைப்பு மீட்பு டெண்டர் (FRT) மற்றும் அவசர சேவை உதவிப் பிரிவு (EMRS) உடன் கோத்தா திங்கி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து மொத்தம் 10 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
காயமடைந்த நான்கு பேரில் முஹமட் ஃபஹ்மி ஐசத் மொக்தார், 24, புரோத்தோன் வைராவில் இருந்தார், ஜுனைதா முகமட் , 48, லிக்வான் ஷா நசுஷன் லிண்டுங் சபுத்ரா, 26, மற்றும் லிஸ்வான் ஷரேல் நசுஷன் அப்துல்லா, 18, ஆகியோர் புரோத்தோன் சாகா காரில் இருந்தனர்.
“புரோத்தோன் வைராவில் இருந்த மற்றய இரண்டு பேர், தீத்தா அப்துல் ஹானி, 58, மற்றும் சம்சியா அப்துல்லா , 21, ஆகியோர் அவர்களின் இருக்கைகளில் சிக்கிக்கொண்டனர்,” மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி சிக்கிய இரண்டு பாதிக்கப்பட்டவர்களை அவரது துறையினர் அகற்றினர்.
“இருவரும் அந்த இடத்தில் இருந்த மருத்துவ அதிகாரிகளால் இறந்ததை உறுதி செய்தனர். அவர்களின் உடல்கள் மேலதிக விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன என்று அவர் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“காயமடைந்தவர்கள் EMRS மற்றும் சுகாதார அமைச்சகத்தின் (KKM) ஆம்புலன்ஸைப் பயன்படுத்தி கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்” என்று இப்ராஹிம் கூறினார்.