ஜோகூரில் 29 குடும்பங்களை சேர்ந்த 86 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 21 :

நேற்று முதல் மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 29 குடும்பங்களைச் சேர்ந்த 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அனைவரும் டேவான் கம்போங் மலாயு பத்து 10, ஸ்கூடாய் மற்றும் செக்கோலா கெபாங்சான் (SK) புக்கிட் முத்தியாரா, தேப்ராவ் உள்ளிட்டவெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
என்றார்.

இது வரை, எந்த ஊனமுற்ற நபர்கள் (OKU) மற்றும் ஆபத்தான அல்லது நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் யாரும் PPS இல் தஞ்சமடைந்ததாக பதிவு செய்யப்படவில்லை.

மேலும் இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “பாதிக்கப்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், தண்ணீர் வடிந்து வானிலை பிரகாசமாகி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

நேற்று நண்பகல் 3 மணி முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இந்த மாவட்டத்தை சுற்றியுள்ள பல குடியிருப்பு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here