புத்ரா மசூதியில் சுமார் 10,000 பேருடன் நடந்த சிறப்பு தொழுகையில் பிரதமர் பங்கேற்பு

புத்ராஜெயா, ஆகஸ்ட் 22 :

நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 21) இரவு புத்ரா மசூதியில் “Munajat Keluarga Malaysia” திட்டத்துடன் இணைந்து நடத்த சிறப்புத் தொழுகையில் கலந்துகொண்ட சுமார் 10,000 பேர்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் பங்கேற்றார்.

இரவு 8.24 மணிக்கு மசூதிக்கு வந்தடைந்த அவர், உணவுக்காக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ இட்ரிஸ் அகமது உடன் சென்ற பின்னர் ஜமாத்துடன் சேர்ந்து இஷா தொழுகையில் பங்கேற்றார்.

இத்தொழுகையில் பொதுப்பணித்துறை மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபதில்லா யூசோப்; தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டான்ஸ்ரீ அன்னுார் மூசா; மற்றும் அரசின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் சுகி அலி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இஷா தொழுகையை தொடர்ந்து, முனிஃப் அஹ்மட் உட்பட பல பிரபலங்கள் தலைமையில் “ஜிக்ர் ​​முனாஜாத்” மற்றும் “காசிதா” ஓதப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் பல தஹ்ஃபிஸ் மையங்கள், நலன்புரி நிறுவனங்கள் மற்றும் அனாதை இல்லங்களுக்கும் பிரதமர் உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here