செப்பாங், ஆகஸ்ட் 22 :
2018 மற்றும் 2021 க்கு இடையில் பதியப்பட்ட ஏழு வழக்குகளுடன் தொடர்புடைய RM1.1 மில்லியன் மதிப்புள்ள சான்றுப் பொருட்களை செப்பாங் காவல்துறை அப்புறப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்ட வழக்குகளுக்குரியவை என்று செப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.
பண்டார் பாரு சலாக் திங்கி, சுங்கை பெலேக், செப்பாங், டெங்கில் மற்றும் புத்ரா பெர்டானா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட பிட்காயின் இயந்திரங்கள், மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும் என்றார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 406A இன் படி செப்பாங் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அயுனி இஸ்ஸாதி சுலைமான் பிறப்பித்த உத்தரவின் பேரிலே இச்சான்றுப் பொருட்கள் அகற்றப்பட்டதாக வான் கமாருல் அஸ்ரான் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.