இனம் தெரியாதவர்கள் நடத்திய சூப்பாக்கிசூட்டில் இருந்து உயிர் பிழைத்த மோட்டார் சைக்கிளோட்டி

கோத்த டாமன்சாராவில் இனந்தெரியாத ஒருவரால் சுடப்பட்டத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிர் பிழைத்துள்ளார். புதன்கிழமை (ஆகஸ்ட் 24) இரவு சுமார் 8.40 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக பெட்டாலிங் ஜெயா OCPD உதவித் தளபதி முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீத் தெரிவித்தார்.

பொதுமக்களிடமிருந்து ஒரு அழைப்பைப் பெற்ற பின் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். பாதிக்கப்பட்டவர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானார். அவருக்கு மார்பு மற்றும் இடது கையில் காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும், அவர் அருகிலுள்ள வீட்டுப் பகுதியில் பாதுகாவலர்களிடம் தஞ்சம் புகுந்தார் என்று அவர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25) தொடர்பு கொண்டபோது கூறினார்.

பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். கொலை முயற்சிக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 307 இன் கீழ் நாங்கள் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

ஏசிபி முகமட் ஃபக்ருதீன், சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் முன் வந்து விசாரணை அதிகாரி உதவி துணைத் தலைவர் முகமட் மாலிகி அரிஃபினை 013-8308485 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here