1MDB விசாரணைக்காக நஜிப் நீதிமன்றத்திற்கு வந்தார்

டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் இப்போது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தனது 1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1MDB) தணிக்கை மோசடி வழக்கு விசாரணைக்காக வந்துள்ளார்.

69 வயதான முன்னாள் பிரதமர் பல பொலிஸ் மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள வாகனங்களுடன் கூடிய கருப்பு SUV வாகனத்தில் காலை 8.48 மணியளவில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார்.

அவரது மனைவி டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோரும் நீதிமன்ற வளாகத்தில் இருந்தார். அங்கு காலை 8 மணி முதல் பல்வேறு ஏஜென்சிகளைச் சேர்ந்த ஊடகவிலயாளர்கள் கூடியிருந்தனர்.

1எம்டிபி இறுதி தணிக்கை அறிக்கை பொதுக் கணக்குக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, அதில் திருத்தங்கள் செய்ய உத்தரவிட தனது பதவியைப் பயன்படுத்தியதாக நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 1MDB இன் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி அருள் கந்தசாமி 45, பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் நடவடிக்கைக்கு உட்படுத்தாமல் பாதுகாப்பதற்காக அறிக்கையில் திருத்தங்களைச் செய்வதில் நஜிப்புக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

இன்றைய நடவடிக்கைகளில் இரண்டு அரசு தரப்பு சாட்சிகள் சாட்சியமளிப்பார்கள். அதாவது அருள் கந்தா மற்றும் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணைய புலனாய்வுக் கிளையின் மூத்த கண்காணிப்பாளர் ஹனிஃப் லாமி.

செவ்வாயன்று (ஆகஸ்ட் 23), SRC இன்டர்நேஷனல் நிதியை RM42 மில்லியன் முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக நஜிப் மீதான 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் RM210 மில்லியன் அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பின்னர், நஜிப் காஜாங் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

நேற்று, முன்னாள் பிரதமர் உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா முன் தனது 1எம்டிபி விசாரணை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here